டிடிவி தினகரன் பிறந்த நாள் - விமர்சையாக கொண்டாடிய கட்சியினர்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்;
Update: 2023-12-14 01:12 GMT
டிடிவி தினகரன் பிறந்த நாள் விமர்சையாக கொண்டாடிய கட்சியினர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 60வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் விமர்சையாக கொண்டாடினர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அப்பாதுரை தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராமநாதபுரம் பகுதி கழக செயலாளரும் தெற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான நாகராஜன் மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் சுந்தர்ராஜ் ஏற்பாட்டின் பேரில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யபட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இதனையடுத்து அதே பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் கோவிலில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கேக் வெட்டபட்டு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதனை தொடர்ந்து திருச்சி சாலையில் உள்ள அல்வேர்னியா பள்ளி வளாகத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு பரிமாறபட்டது. இறுதி நிகழ்வாக காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் தங்க தேர் இழுக்கும் நிகழ்வானது நடைபெற்றது.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் விழா கொண்டாடத்தில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,பகுதி கழக செயலாளர்கள் மற்றும் வட்டகழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.