அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து; ஒருவர் பலி!
சேத்துப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார்.;
Update: 2024-04-16 03:05 GMT
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 43) கட்டிட மேஸ்திரி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.