காவல் நிலையம் அருகே கட்டுப்பாடு இல்லாமல் வந்த காரால் விபத்து. முதியவர் படுகாயம்
காவல் நிலையம் அருகே கட்டுப்பாடு இல்லாமல் வந்த காரால் விபத்து ஏற்பட்டு முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Update: 2024-02-19 10:03 GMT
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் வயது 73. இவர் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 4 மணி அளவில், கரூர்- கோவை சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவர் க.பரமத்தி காவல் நிலையம் அருகே சென்றபோது, எதிர் திசையில் கோவை மாவட்டம், பேரூர், பச்சப்பாளையம், ஆபிஸர் காலனியைச் சேர்ந்த சந்திரசேகர் வயது 47 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், சண்முகம் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சண்முகம் க.பரமத்தி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி,விபத்து ஏற்படுத்திய சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.