புதுகையில் 38 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் ஆர்வலர்

புதுகையில் 38 ஜல்லிக்கட்டு காளைகள் ஆர்வலர் வளர்த்து வருகிறார்.;

Update: 2023-12-31 12:14 GMT

ஜல்லிக்கட்டு காளையுடன் சமூக ஆர்வலர்

புதுக்கோட்டையில் 38 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு ஆர்வலர் மாவட்டத்தின் அதிக எண்ணிக்கை காளைகள் வளர்ப்பதாக அறியப்படுகிறார். தமிழர் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்டத்தில் 76 இடங்களிலும், 2023ஆம் ஆண்டு 72 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரையிலும் கிராமங்களில் நடைபெறும். அனைத்து வகையான கிராம கோயில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. அதிகம் கொண்ட மாவட்டமும் புதுக்கோட்டை தான்.

Advertisement

இதில் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் காளைகளை வளப்போராக கீரனூர் அருகே உள்ள மங்கதேவன்பட்டியைச் சேர்ந்த கணேஷ் கருப்பையா உள்ளார். மாத்தூர் கைனாங்கரையில் உள்ள அவரது பொறியியல் தொழில் கூட வளாகத்தில் 32 காளைகள் தற்போது வளர்க்கப்படுகின்றன. மேலும் 6 காளைகள் மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளன.

கோயில் காளைகளை கோயில் காளைகளாக கருதப்படும் மூன்று காளைகளை தவிர இதர 35 காளைகளும் போட்டிக்கு உரியன. காளைகளை வளர்த்து பழக்குவது என்பது நீண்ட தவம் ஆட்களை கண்டு தான் காளைகள் பழகும் பழகி பழகிய பிறகுதான் எளிதாக அருகில் சென்று பராமரிக்க முடியும் என்றார் கணேஷ் கருப்பையா.

Tags:    

Similar News