பழமை வாய்ந்த இலவு மரம் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிப்பு

குலசேகரம் அருகே பழமை வாய்ந்த இலவு மரம் முறிந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2024-05-20 14:45 GMT

குலசேகரம் அருகே பழமை வாய்ந்த இலவு மரம் முறிந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ரேசன்கடை சந்திப்பு பகுதியில் இருந்து புலியிறங்கி செல்லும் இணைப்பு சாலையில் அரமன்னம் பகுதியில் சாலை யோரம் நின்ற இலவு மரத்தின் அடிப்பகுதி செதில் அரித்த நிலையில் காணப் பட்டது. மின் கம்பிகளுக்குஅருகில் ஆபத்தான நிலையில் நின்ற இதனை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தநிலையில் சில நாட்களாக பெய்த அடை மழை காரணமாக மரம் இன்று திடீரென சரிந்து விழுந்தது.இதில் மின்கம்பம் ஒன்று உடைந்து சேதமடைந்தது. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தது. இதனால் மின் சாரம் துண்டிக்கப்பட் டது. போக்குவரத்து தடை பட்டது. இதனையடுத்து மின்வா ரிய ஊழியர்கள், பொது மக்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
Tags:    

Similar News