தமிழ் அமைப்பு ஆண்டு விழா !
சின்னசேலத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் ஆண்டு விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 06:54 GMT
தமிழ் அமைப்பு ஆண்டு விழா
சின்னசேலத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் ஆண்டு விழா நடந்தது. சின்னசேலம் அரிசி ஆலை அரங்கத்தில் நடந்த விழாவிற்கு சின்னசேலம் தமிழ் சங்க காப்பாளர் சக்திகிரி தலைமை தாங்கினார். கம்பன் கழக தலைவர் பாலமுருகன், கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை தலைவர் சத்தியநாராயணன், சின்னசேலம் தமிழ் சங்க தலைவர் கவிதைத் தம்பி, மாவட்ட தமிழ் சங்க தலைவர் இதயம் கிருஷ்ணா, கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். கவிஞர் பன்னீர்செல்வம் வரவேற்றார். கவிஞர் தேன்மொழி தலைமையில் கவியரங்கம் நடந்தது. அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் அன்பு, சிறுவர், சிறுமியர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். நடுநாட்டு தமிழன், கவிஞர் கலியன் ஆகியோர் தமிழ் இலக்கிய உரையாற்றினர். 50 பெண் கூலி தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சினிமா பாடலாசிரியர் முத்துலிங்கம், 60 சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். அனந்தகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், கருணாநிதி, நடராஜன், விக்னேஷ், பாரதி, குமாரசாமி, தண்டாயுதபாணி உட்பட பலர் பங்கேற்றனர். கவிஞர் ராமானுஜம் நன்றி கூறினார்.