தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2024-01-05 06:04 GMT
பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வில் வட்டார அளவில் முன்னுரிமை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை கலைந்து விட வேண்டும் மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், மற்றும் ஆலத்தூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டாரத் தலைவர் ஜான் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்த்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல வேப்பூர், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஆகிய மூன்று இடங்களிலும் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிட தக்கது.