சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து முதியவர் காயம்

சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் காயம் அடைந்தார்.;

Update: 2023-12-17 11:13 GMT
சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து முதியவர் காயம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மேலத்தெருவை பகுதியைச் சார்ந்தவர் வேல்மாணிக்கம். இவர் பூ வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது, இவர் அவருடைய சைக்கிளில் புல்லலக்கோட்டை சந்திப்பில் சென்று கொண்டிருந்த பொழுது, அதே சாலையில் விருதுநகர் சின்ன மூப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த சாலமன் ராஜாமணி என்பவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து வேல் மாணிக்கம் ஓட்டி வந்தார் சைக்கிள் மீது மோதி 3 ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதில் வேல்மாணிக்கம் காயமடைந்த நிலையில் அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி வேல் மாணிக்கத்தின் மனைவி மாரீஸ்வரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News