அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Update: 2024-04-30 05:19 GMT
பொன்னமராவதி அருகே உள்ள நல்லுார் ஊராட்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர். சின் னழகு (57). இவர் நேற்று புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் சுந்தர நகர் என்ற இடத்தில் நடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடை யாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னழகு அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.