நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
தண்ணீர் பந்தல் அருகே நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து;
Update: 2023-12-10 09:23 GMT
சாலை விபத்து
கரூர் மாவட்டம் கா பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புகலூர் தாலுகா விஸ்வநாதபுரம் குளத்தூர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 60 இவர் டிசம்பர் 6ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் மதியம் 2 மணி அளவில் நடந்த சென்று கொண்டிருந்தார் அப்போது தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் டூ வீலர் ஒன்று, நடந்து சென்ற தங்கராஜ் மீது மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தங்கராஜுக்கு தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கராஜ் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத டூ வீலரை ஒட்டிய நபர் யார்? அந்த வாகனம் எது? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.