மின் ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி

சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-06-28 17:04 GMT

பலி 

தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் ரா. அற்புதமணி(52). இவர் சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சி துணை மின் அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள்உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் விநாயகர்கோவில் தெருவில் மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் மின் கம்பத்தில்தொங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல்அறிந்து தட்டார்மடம் போலீஸார் சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News