கலவை எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியா் பலி!
தூத்துக்குடியில் கலவை இயந்திரம் பழுது பாா்க்கும் போது தவறி கீழே விழுந்து கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-19 05:20 GMT
ஊழியா் பலி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூரைச் சோ்ந்த நல்லையா மகன் கந்தசாமி(55). இவா் தூத்துக்குடி வீரபாண்டிய புரத்தில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று கலவை இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றபோது, அதில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.