பதக்கம் வென்று ஊர் திரும்பிய மாணவிக்கு உற்சாக வரவேற்பு
கடந்த25 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காங் நகரில் நடைபெற்ற அகில உலக யோகப்பட்டியில் விருதுநகரைச் சேர்ந்த ஆறு வயது மாணவி கிரிஷா கலந்து கொண்டு 150 வினாடிகளில் நடனமாடிக் கொண்டு பத்து வகையான ஆசனம் செய்து காண்பித்து உலக சாதனை படைத்தார்.
கடந்த 25ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்கோக் நகரில் நடைபெற்ற அகில உலக யோகா போட்டி நடைபெற்றது . இந்த அகில உலக யோகா போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 6 வயது முதல் 60 வயது வரை உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இதில் 6 வயது பிரிவில் 10 நாடுகளிலிருந்து 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடுமாநிலம் விருதுநகர் மாவட்டம், ஆவல் சூரன் பட்டியைச் சேர்ந்த 1 ம் வகுப்பு பயிலும் 6 வயது மாணவி கிரிஷா கலந்து கொண்டு நடனமாடிக் கொண்டே சக்கராஷனம், கண்ட பேருண்டாசனம், விபரித சலபாசனம், சக்கரபந்தாசனம், கவுண்டின் ஆசனம் உள்ளிட்ட பத்து வகையான ஆசனங்களை 150 வினாடிகளில் செய்து காண்பித்து அசத்தி தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இன்று விருதுநகர் திரும்பிய கிரிஷா என்ற மாணவியை குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து அவரை சிறப்பாக வரவேற்றனர்