தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு!

கோவை சுந்தராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-20 09:13 GMT

கோவை சுந்தராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை:சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகம்மது மக்களிடம் செல்வாக்கு இல்லையென்றாலும் தனி மனிதராக அவரது பகுதிகளில் கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இதுவரை நடந்த தேர்தல்களில் பல தடவை போட்டியிட்டு தோல்வி அடைந்த்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் மனு தாக்கல் செய்யும் போது மாட்டு வண்டி,ராஜா வேஷம் போன்ற பல கெட்டப்புகளில் வந்து கவனத்தை ஈர்ப்பதில் வல்லவர்.பல முறை சாதனைக்காக தேர்தல்களில் நிற்பதை வழக்கமாக கொண்ட இவர் 42வது முறையாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார்."ஜனநாயகம் இறந்து விட்டது" என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வருகை புரிந்த அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார் சவப்பெட்டியை பந்தைய சாலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் அவரை மட்டும் வேட்பமான தாக்கல் செய்வதற்கு வருமாறு அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.பின்னர் செய்தியாளர்களை பேட்டியளித்த நூர் முகமது 1996-ம் ஆண்டு முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருவதாகவும் 97-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் அப்போது தெரிவித்தார்.ஜனநாயக முறைப்படி யாரும் ஓட்டு போடுவது இல்லை எனவும் மக்கள் பணத்தை பெற்று கொண்டு ஓட்டு போடுவதாக தெரிவித்தார்.ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதை வலியுறுத்தி சவப்பெட்டி எடுத்து கொண்டு வந்த போது காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக கூறினார்.

Tags:    

Similar News