மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி முதியவர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து முதியவர் பலி CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2024-05-26 05:06 GMT
விபத்தில் பலி

சங்ககிரி அருகே சுண்ணாம்புக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பெருமாள் (76). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாட்டாம்பாளையம் பகுதிக்கு சென்று விட்டு, மீண்டும் சங்ககிரி செல்வதற்காக ஈரோடு பிரிவு சாலை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சங்ககிரியில் இருந்து தற்காலிக அரசு பேருந்து ஓட்டுநர் சௌந்தரராஜன் 25 பயணிகளை ஏற்றி கொண்டு பவானி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர் பாரத விதமாக முதியவர் பெருமாளை மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெருமாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெருமாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து முதியவர் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News