சூலக்கரை பகுதியில் முதியவர் சிகிச்சை பலனின்றி பலி
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் தவறி கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானர்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை இபி காலனி பகுதியைச் சார்ந்தவர் பழனிச்சாமி இவருடைய மனைவி மாலையம்மாள் பழனிச்சாமி கடைக்கு செல்வதற்காக அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுக்க முயற்சி செய்தபோது நிலை தடுமாறு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு தலையில் காயம் அடைந்ததாகவும் காயம் சிறிதாக இருந்தாலும் வழியில்லாத காரணத்தினாலும் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் கை வைத்தியம் பார்த்ததாகவும் இதை அடுத்து மறுநாள் அவரால் சரியாக பேச சாப்பிட முடியாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்ட செல்லப்பட்டார் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு குறித்து பழனிச்சாமியின் மனைவி வாழைமால் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.