திண்டுக்கல் அருகே வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்த முதியவர் பலி
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தின் எதிர்ப்புறம் உள்ள மண்டபத்தில் அமர்ந்திருந்த முதியவர் வெயிலின் தாக்கத்தினால் இன்று மயங்கி விழுந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 13:55 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தின் எதிர்ப்புறம் உள்ள மண்டபத்தில் அமர்ந்திருந்த முதியவர் வெயிலின் தாக்கத்தினால் இன்று மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.