வீட்டு மாடியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட முதியவர் தவறி விழுந்து பலி

சேலம் மாவட்டம், அல்லிக்குட்டை பகுதியில் மாடியில் நடைப்பயிற்சியில் ஈடுப்பட்ட முதியவர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-25 12:19 GMT

முதியவர் பலி

சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வினையத்தான் கவுண்டர் (வயது 76). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டு மாடியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News