விவசாய நிலத்திற்கு சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலி
மதுராந்தகம் அருகே விவசாய நிலத்திற்கு மின் மோட்டார் இயக்கம்பொழுது மின்சார தாக்கி முதியவர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 09:18 GMT
கோப்பு படம்
செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் அடுத்த புத்தூர் கிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (வயது 65) என்பவர் கயப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவருடைய விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று மின் மோட்டார் சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..