அனந்தபுரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2009-ம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத் தில் நடைபெற்றது.

Update: 2024-06-19 08:33 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2009-ம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முனியப்பிள்ளை தலைமை தாங்கினார். தற்போதைய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வாஞ்சிநாதன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் பாலு, கிருஷ்ண மூர்த்தி, நந்தகோபாலன், யூஜின்சார்லஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் இரணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் முன்னாள் மாணவ- மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந் துகொண்டு ஒருவருக்கொருவர் பழைய நிகழ்வு களை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, அவர்கள், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முனியப்பிள்ளை மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும் தங்களுடன் படித்த முன் னாள் மாணவரான பாண்டியன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததையடுத்து அவரது குடும்பத்துக்கு முன் னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ரூ.60 ஆயிரத்தை நிவாரண உதவியாக வழங்கினர். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் கணினி அறை, உடற்கல்வி அறைகளை சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொடுத்ததோடு பள்ளி மாணவர்களுக்கு தேவை யான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினர்.

Tags:    

Similar News