அன்பில் மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்

லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Update: 2024-04-10 06:04 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயில் அன்பில் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்ட விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் கடந்த மாா்ச் 17-ம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் அம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டாா்.

இதையடுத்து, பங்குனி தேரோட்டத்துக்கான கொடியேற்ற விழா கடந்த 7 ம் தேதி நடைபெற்றது.திருவிழா நாட்களில் உற்சவா் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் மாலையில் திருவீதிஉலா நடைபெற்றது. இந்நிலையில் தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். இதில், லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தா்கள் காலை முதல் மாலை வரை காளி வேடம் அணிந்து, அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து சென்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். லால்குடி முதல் அன்பில் வரை வழிநெடுகிலும் தண்ணீா்ப் பந்தல் அமைத்து நீா்மோா், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்க்கான ஏபாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையா் தலைமையில் கோயில் குருக்கள்கள் ,கோயில் பணியாளா்கள்,பொதுமக்கள் செய்திருந்தனா்.

Tags:    

Similar News