அங்காள அம்மன் ஊஞ்சல் உற்சவம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் மலர் அலங்காரம் செய்து, ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார்.;
Update: 2024-04-27 04:58 GMT
ஊஞ்சல் உற்சவம்
காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த ஊஞ்சல் உற்ச வத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை 10:30 மணி அளவில், 108 பால்குட ஊர்வலம் நடந்தது. சுமங்கலி பெண்கள், பால்குடத்தை ஊர்வலமாக சுமந்து வந்து, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, 108 குடம் பாலாபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதையடுத்து, அங்காள பரமேஸ்வரி அம்மன் மலர் அலங்காரம் செய்து, ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார்.