அங்காளம்மன் திருக்கோயில் தேர் திருவிழா
சங்ககிரி: கல்வடங்கம் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
Update: 2024-03-13 17:23 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோயில் மாசி மாத தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் மாசி மாத தேர் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உற்சவர் அம்மன் சக்தி அழைத்து புஷ்ப அலங்காரத்தில் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வந்தார். இதனையடுத்து ஸ்ரீ அங்காளம்மன் திருத்தேரில் எழுந்தாருளி பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்த இழுத்து முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தது தொடர்ந்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சியில் இன்று பம்பை மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வந்து திருத்தேர் நிலை சேர்த்து ஓம் சக்தி பராசக்தி என கோசமிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.