கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கீழ்பெண்ணாத்தூர் அடுத்த குன்னங்குப்பம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

Update: 2023-12-07 02:54 GMT

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கீழ்பெண்ணாத்தூர் அடுத்த குன்னங்குப்பம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது ஒன்றிய குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி லோகநாதன் முகாமினை தொடக்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவர் ஆனந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் (மருத்துவர் பேபி, கால்நடை ஆய்வாளர் குணசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுப்பிரமணி மற்றும் செயற்கை முறை கருவூண்டாளர்கள் விஜயகுமார் & பலராமன்) சுமார் 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, கருவூட்டல், தறகாலிக மலடு நீக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் மேற்கொண்டனர். முகாமில் சிறந்த கிடாரிக்கன்று உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை ஒன்றிய குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி வழங்கினார். முகாமில் நோய் குறித்து விழிப்புணர்வு, தாது உப்பு கலவை வழங்குதல் & தீவன பராமரிப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமின் முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைலர் முத்துகுமரன் நன்றி கூறினார்
Tags:    

Similar News