குளிக்கச் சென்ற கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் குளத்தில் மூழ்கி பலி !

கொல்லங்கோடு அருகே நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2024-06-19 04:43 GMT

பலி 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் சஜீவ்கு மார்.இவர் முன்சிறை ஊராட்சி ஒன்றிய கால் நடை பராமரிப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.இந்தநிலையில் நேற்று மாலை சஜீவ்குமார் வீட்டின் அருகே உள்ள பீலிக்குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.

அப்போது குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதில் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சஜீவ்குமாரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.உடனே இதுபற்றி கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் குளத்திற்குள் இறங்கி சஜீவ்குமாரை தேடினர். தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர தேடலுக்கு பிறகு குளத்துக்குள் இறந்த நிலையில் கிடந்த சஜீவ்குமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்தகொல்லங்கோடு போலீ சார் சஜீவ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்த புகா ரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News