அண்ணா நினைவு தினம்; திமுகவினர் மரியாதை

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் திருவுருவ படத்திற்கு குருவிகுளம் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-03 07:30 GMT

  அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் திருவுருவ படத்திற்கு குருவிகுளம் தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தி.மு.க கிளை கழக சார்பில் அறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கடற்கரை தலைமையில் அறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக குருவிகுளம் கிளை கழக செயலாளர் செந்தில், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News