பொன்னியம்மன் கோவிலில் அன்னபாவாடை உற்சவ விழா

பொன்னியம்மன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்னபாவாடை உற்சவ பெருவிழா நடைபெற்றது.

Update: 2024-03-25 05:28 GMT

அன்னபாவாடை உற்சவம் 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்னபாவாடை உற்சவ பெருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க உணவு, பழவகைகள், காய்கறிகள் ஆகியவை படையலிடப்பட்டது. இதில் ராணிப்பேட்டை முரளிதர சுவாமிகள், கரியாக்குடல் சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானப்பிரகாச சுவாமிகள், அன்ன தர்ம சாலை நிலா நாதவர்மா, வாதவூர் அடிகளார் மற்றும் ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News