மேட்டுப்பாளையம் அருகே கோவிலில் அன்னதானத் திட்டம் தொடக்கம்
திருப்பூர் மாவட்டம் நட்ராய சுவாமி திருக்கோவிலில் அன்னதான திட்டத்தை அமைச்சர்கள் மு.பெசாமிநாதன், சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 11:38 GMT
அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் அருள்மிகு நாட்ராய சுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்ரமணியம்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுறரை, உதவி ஆணையர் ஜெயதேவி அருள்மிகு நட்ராய சுவாமி திருக்கோவில் அறங்காவல் குழு தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.