தமிழகத்தை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கே. பி முனுசாமி

தமிழகத்தை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-13 08:51 GMT

செய்தியாளர்களை சந்தித்த கே. பி முனுசாமி 

கிருஷ்ணகிரி அருகே லக்கபத்தனப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள ஏரியில் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளை துவக்கி வைத்து அதிமுக துணை பொதுசெயலாளர் கே. பி முனுசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார்,  அப்போது அவரிடம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சித்த அண்ணாமலை குறித்து கேட்டதற்கு,  அண்ணாமலை உ.பியில் 33 கோடி ரூபாய் முதலீடு என்கிறார்.

இந்திய பிரதமராக உள்ள மோடி மாநிலங்களில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு இந்த மாநிலங்களில் தொழில் தொடங்குங்கள் எனக்கூறியிருந்தால் அண்ணாமலை கூறியதை வரவேற்றிருப்பேன்.

ஆனால் மோடி குஜராத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் பங்கேற்று அவர் சொந்த மண்ணிற்கு முதலீடுகளை ஈர்க்கிறார் என்றால் அவரும் சிறிய வட்டத்திற்குள் செல்கிறார்.

தமிழகத்தை குறித்து விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட அப்போதே முதல்வராக இருந்த அம்மா அவர்கள் கரைசேவைக்கு செல்லுங்கள் என்று கட்டளையிட்டார்.

அயோத்தியில் அரசியல் பேசவிரும்பவில்லை அம்மாவின் நிலைப்பாடு தான் பொதுசெயலாளர் எங்களின் நிலைப்பாடு,  கருணாநிதி தனது முழு குடும்பத்தையே அரசியலில் ஈடுபடுத்தினார்.

தற்போது ஸ்டாலின் தனது மகனை முன்நிறுத்தி துணை முதல்வராக்குகிறார் இது வாரிசு அரசியல், யார் எந்த பொறுப்பில் இருந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில், அவர்களை தூக்கி எறிந்து இபிஎஸ் மக்கள் முதல்வராக்குவார்கள்.

  அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இணையுமா என்கிற கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக பொதுசெயலாளர் முடிவு செய்து அதனை உங்களிடம் அறிவிப்போம் என்றார்.

Tags:    

Similar News