சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே சிக்கிய ஆட்டுக்குட்டி அண்ணாமலை
சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியாக அண்ணாமலை தினந்தோறும் தமிழக அரசியலில் பிதற்றிக் கொண்டு இருக்கிறார் என் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்
மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய மருத்துவர் சரணங்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் இன்று மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வித்தியாசமாக மக்களுடைய ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்ற கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.
நாங்கள் வாக்காளரை சந்திக்கும் போது எங்கள் தலைமையிலான கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், அண்ணன் கேப்டன் அவர்களுடைய கட்சியும் அதே போல அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு பெரிய வரமாக கிடைத்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா - Sdpi மற்றும் புதிய தமிழகம் மருது சேனை மற்றும் 11 அமைப்புகள் இன்றைக்கு எங்களுடைய கூட்டணியை ஆதரித்து உள்ளார்கள்.குறிப்பாக மதுரை பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் களம்.
இந்த களம் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்பது ஒரு வரலாற்று உண்மை. எதுவாக இருந்தாலும் குறிப்பாக சினிமா நாடகம் அரசியல் என மதுரை மண் ஒரு செண்டிமெண்டாக இருக்கக்கூடிய ஒரு தளம் இந்த மதுரையில் நாங்கள் இப்போது பார்க்கின்ற கூடிய காட்சிகள் எல்லாம்... மருத்துவர் முதலில் மச்சத்தில் இருந்தார் தற்போது வியப்பாக இருக்கிறது,
எனவே இந்த தேர்தலில் நாங்கள் பார்த்தது முதல் தொடக்கமே மிக அற்புதமாக அமைந்தது மக்கள் எல்லோருமே மனமுவந்து அதிமுக ஆட்சி வரவேண்டும் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்த ஆட்சி தான் அதிமுக என்று என்ன தொடங்கி விட்டார்கள் இந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்கள் புரிந்து இருக்கிறார்கள் விலைவாசி உயர்வு வரி உயர்வு ஒரு பக்கம் மாநில அரசு மறுபக்கம் மத்திய அரசு ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் அனைத்து விளைபொருட்களும் விலை ஏறிவிட்டன மத்திய அரசு திட்டங்கள் குறிப்பிட்டுச் செல்லும் அளவில்,
மாநிலத்தில் இல்லை வடமாநிலங்களில் தான் அவர்களுடைய திட்டங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளார்கள் திட்டங்கள் என்றால் தொழில் ரீதியாக நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் வரும் என்று சொன்னார்கள் தற்போது அவருடைய நிலை என்ன பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னார்கள் அதனுடைய நிலை என்ன?
இதில் நகைச்சுவை என்னவென்றால் நம்முடைய முதலமைச்சர் திமுகவின் தலைவர் அவருடைய தலைமையிலான கூட்டணியில் என்ன சொல்கிறார்கள் பெட்ரோல் டீசல் 75 ரூபாய்க்கு 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று கூறுகிறார் அதை பார்க்கும் போது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது 4 ரூபாய் ஐந்து ரூபாய் குறைக்காதவர்கள் இப்போது இதை சொல்கிறார்கள் சமையல் எரிவாயுவுக்கு 100 ரூபாய் மானியம் கொடுக்க முடியாதவர்கள்,
இவ்வாறாக பொய்யைச் சொல்லக் கூடிய மக்களுடைய மனநிலை தெளிவாகத் தெரிகிறது 500 ரூபாய்க்கு எரிவாயு எப்படி கொடுக்க முடியும் என்பது பாமர மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கே தெரியும் விடியல் தருவோம் என்று சொல்லி வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தி எங்களை ஏமாற்றுகிறார்கள்,
என்பது பாமர மக்களுக்கு தெரியும் நமது வேட்பாளருடைய பண்பு அனைவருக்கும் தெரியும் இவர் பல்வேறு தன்னார்வத் தொண்டுகள் செய்து வருகிறார் மதுரையில் ஏராளமான பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு கை கால் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி இருக்கிறார் மருத்துவ சேவை செய்து வருகிறார் அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் பேசி வருகிறார்கள் எங்களை எதிர்த்து நிற்கக் கூடிய வேட்பாளர் மிகவும் வீக்கான ஒரு வேட்பாளராக உள்ளார் எங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார்,
தற்பொழுது அவர் திமுக தொண்டர்களை கூட குறிப்பாக அவரை உயர்த்துவிட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கிவிட்ட திமுகவினரை கூட அவர் சரிவர சந்திப்பதில்லை குறிப்பாக மதுரைக்கு எந்த ஒரு முக்கியமான திட்டங்களையும் அவர் கொண்டுவரவில்லை அவர் எப்போது பார்த்தாலும் கீழடி என்றுதான் பேசுகிறார்,
ஆனால் கீழடி என்பது நாங்கள் கொண்டு வந்த திட்டம் நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் அதற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் கூடுதலாக நிதி ஒதுக்கீட்டு இவர் ஏதோ தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் போல பணி செய்தது போல இவர் பேசி வருகிறார்.
ஒன்றும் கதைக்கு உதவவில்லை செல்ப்பு எடுக்க வில்லை எங்கள் வேட்பாளர் ஸ்டார்ட் ஆகி ஹை ஸ்பீடு போய்க்கொண்டிருக்கின்றோம் பாருங்கள் சிரித்த முகம் ஒரு முகம் பாருங்கள் அருமையாக உள்ளது அவர் கதாநாயகனாக படத்தில் நடித்த தற்போதும் அவர் நடிப்பது போலவே இருக்கிறார் அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது எங்களது தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் எல்லா தொண்டர்களும் புரட்சித் தமிழர் எடப்பாடி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அம்மா அவருடைய இயக்கம் மீண்டும் தமிழகத்தில் வெற்றி பெறும் குறிப்பாக மதுரை புரட்சித்தலைவி அம்மா எம்ஜிஆர் அவருடைய கோட்டை இன்று எம்ஜிஆர் பெயரை தங்கி இருக்கக்கூடிய விளையாட்டு திடலில் நாங்கள் தற்போது உங்களை சந்தித்து பேசி வருகின்றோம் இந்த விளையாட்டு திடல் பலமுறை எம்ஜிஆர் அவர்கள் வந்திருக்கிறார் இங்கே இருக்கக்கூடிய ஒலி ஒளிக்காட்சி அவர்தான் தொடங்கி வைத்தார் இதுபோல ஏராளமான திட்டங்களை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு இந்த பந்தயத்திடல் புரட்சித் தலைவர் அவருடைய பெயரால் இருக்கக்கூடிய,
இந்த பந்தயத்திடல் அத்தனை வளர்ச்சியும் அதிமுக காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது தான் இந்த அரசு தற்போது தான் நிதி ஒதுக்கி ஒன்றும் செய்யவில்லை இங்கே இருக்கக்கூடிய உள் விளையாட்டரங்கம் இறகு பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு மைதானங்களும் அதிமுக காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது தான் அதிமுக ஆட்சி காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது தான் நானும் ஒரு விளையாட்டு வீரன் தான் பத்தாண்டு காலமாக அமைச்சராக இருந்தபோது இந்த திட்டங்களை எல்லாம் நான் கொண்டு வந்தேன் மதுரையை தன்னிறைவு பெற்ற மதுரையாக இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாத ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பொலிவுரு நகர திட்டத்தின் கீழ் மதுரையில் பணிகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது அதிமுக காலகட்டத்தில் கொண்டுவந்த எந்த திட்டத்தையும் இவர்கள் கொண்டு வரவில்லை மதுரையில் பறக்கும் பாலம் என்பதை மக்கள் இப்போதுதான் பார்க்க முடிகிறது காளவாசல் பகுதியில் ஏற்கனவே பாலம் கொண்டுவரப்பட்டு தற்போது என்னுடைய முயற்சியில் தற்போது முடக்குச்சாலை பகுதியில் அதிமுக காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகள் நிதிகள் ஒதுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் நிறைவு,
பெறும் தருவாயில் உள்ளது அதேபோல இந்த பகுதியில் இருக்கக்கூடிய ஓபுளாபடித்துறை பாலம், குருவிக்காரன் சாலை, செல்லூர் பாலம் ,ஆரப்பாளையம் பாலம் ,உள்ளிட்ட அனைத்து பாலங்களும் அதிமுக காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது வைகை அணையில் மூன்று தடுப்பணைகள் கொண்டுவரப்பட்டுள்ளது தெப்பக்குளத்தில் நிரந்தர நீர் தேக்கும் வண்ணம் பணிகளை நடைமுறைப்படுத்தியது அதிமுக இவ்வாறு எங்கள் திட்டங்கள் எத்தனையோ சாதனைகள் இருக்கிறது ஆனால் வெங்கடேசன் அவர்கள் முதலில் நல்ல கதை எழுதினார்.
தற்போது கதை விடுகிறார் அதிலும் சரக்கு இல்லை பொதுவாக சரக்கு முறுக்கு செட்டியார் முறுக்கு என்று சொல்லுவார்கள் தற்போது அவரிடத்தில் சரக்கு இல்லை செட்டியார் முறுக்கும் இல்லை கூட்டணியில் வலுவில்லை மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள் சரக்கும் சூப்பர் சரக்கு எங்களது வேட்பாளர் மருத்துவர் சூப்பர் சரக்கு எங்களது புரட்சித்தமிழரும் முருக்கானவர் ஒரு இரண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து களத்தில் நிற்கின்றார் இவருக்கு பாரதிய ஜனதா ராம சீனிவாசன் அவர்கள் பேசி வருகிறார். தமிழகத்தில் நன்றாக மாட்டிக்கொண்ட ஆடாக (அண்ணாமலை )இருக்கிறார் ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம் சிறுத்தை இந்த சிறுத்தைக்கும் சிங்கக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக அவர் இருக்கிறார் என்ன பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார் எனவே இதில் வெற்றி பெறப்போவது மக்களுடைய நம்பிக்கையை பெற்ற மக்களுடைய அபரிதமான ஆதரவை பெற்று இருக்கின்ற எங்களுடைய டாக்டர் சரவணன் இரட்டை இலை,
என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் தற்போது நடைபெறக்கூடிய தேர்தல் குறிப்பாக மதுரையை பொறுத்த மட்டில் அரசியல் விழிப்புணர்வு மிக்க பூமி இந்த பூமியில் பொதுவாக நான் சொல்வது என்னவென்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரைப் படத்தை பாருங்கள் வேறு யாரையும் அவர் எதிரியாக பயன்படுத்த மாட்டார் குறிப்பாக நம்பியார், பிஎஸ் வீரப்பா, மனோகர் ஆகியோரத்தன் வில்லனாக பதிவு செய்பவர்,
எங்களுக்கு மனோகரனாக பி எஸ் வீரப்பாவாக இருப்பவர்கள் திமுக தான் மற்றவர்கள் எல்லாம் சுஜீப்பி மதுரை பாஜக வேட்பாளர் எனக்கும் நல்ல பழக்கமானவர்கள் அன்பாக பழகக்கூடியவர்தான் அவரை மதுரை களத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். அவர் நோட்டாவை விட கம்மியான வாக்குகளை பெறுவார் அவர்கள் மதுரை ஆன்மீக பூமி எனவே இந்த ஆன்மீக பூமியில் பாரதிய ஜனதா நாம் வாக்குகள் வாங்கலாம் என்று சொல்கிறார்கள் அதை கதைக்கு உதவாது இந்த கத்திரிக்காய் கதை எல்லாம் இங்கே நடக்காது அவருக்கே தெரிந்து விட்டது தமிழகம் முழுவதும் இன்றைக்கு பாஜக வெற்றி பெறாது உதாரணத்திற்கு ஒரு நாளிதழ் மற்றும் யூட்யூபை கையில் வைத்துக்கொண்டு செயற்கையாக அவர்கள் அவர்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்,
குறிப்பாக விளம்பரம் பயங்கரமாக இருக்கிறது பொதுவாக டிரைலர் நன்றாக இருக்கும் ஆனால் படம் சொதப்பு விடும் படம் பிளாப் ஆகிவிடும் அந்த வகையில் தான் பாஜகவினுடைய ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது ஆனால் ரிசல்ட் பிளாப் ஆகிவிடும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலை தான் வரும் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக திமுக தான் எங்களுடைய எதிரி இந்த திமுக தான் திமுகவின் ஆட்சிகளுடைய அவலங்களை எடுத்து சொல்லி மத்திய அரசுடைய அவலங்களை எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில் மக்கள் நன்றாக கேட்கிறார்கள்,
மருத்துவர் நன்றாக பேசுவதால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது மோடி ஜி அவர்கள் ஒரு இடத்திற்கு செல்லும்போது அங்கே இருக்கக்கூடிய மக்கள் யார் வருகிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் பேசுவதற்காக இருப்பவர்கள் எழுதிக் கொடுப்பதுதான் அவர் ஒவ்வொரு மேடையிலும் பேசுகிறார்,
அவருக்கு என்ன தெரியும் வட கோடியில் இருக்கக்கூடிய அவருக்கு தென்கோடியில் இருக்கக்கூடியவர்களை பற்றி என்ன தெரியும் பத்தாண்டுகள் ஒரு பாமரனாக நான் கேட்கின்றேன் ஐயா மோடி ஜி அவர்களே நீங்கள் தான் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தீர்கள். ஏன் காமராஜர் ஆட்சி கொடுக்கவில்லை புரட்சித்தலைவர் ஆட்சி கொடுக்கவில்லை எம்ஜிஆர் ஆட்சி கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்பார்களா இல்லையா?
நாங்கள் கேட்க மாட்டோமா தற்போது வரை கொடுக்காமல் இருக்கக்கூடிய நீங்கள் இனிமேல் எப்படி கொடுக்க போகிறீர்கள்?? சொன்னதையே செய்யாத நீங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று மக்களை ஏமாற்றி வரும் உங்களை எப்படி வேண்டுமென்பார்கள் யாராக இருந்தாலும் இன்றைக்கு கலைஞர் குடும்பத்தில் இருக்கின்ற நாங்கள் இந்த கட்சியை கலைஞர் குடும்பம் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய இயக்கத்தை கலபரம் செய்துவிட்டது ஊழல் படித்துவிட்டது திமுக ஆட்சி சரியில்லை என்று சொல்லித்தான் நாங்கள் இந்த அதிமுக தொடங்கப்பட்டது,
திமுக என்கிற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் அதுவரை அதிமுக ஓயாது ஒளியாது என்பதை அம்மா அவர்கள் சொன்னார்கள் அதே வழியில் எடப்பாடி அவர்களும் சொல்லி வருகிறார் வழி நடத்தி வருகிறார் இங்கே எங்களிடம் எப்படி இருந்தவர் எப்படி இருந்த மனுஷன் இன்றைக்கு பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு அவர் நிற்கக்கூடிய காட்சியை பாருங்கள் பலாப்பழம் பழுக்காது அழுகித்தான் போகும் உண்மையிலேயே மனசாட்சி இல்லாமல்ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தன்மானம் ரோஷம் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓபிஎஸ் போய் ?? எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எதுவும் பங்கமோ கிடையாது அண்ணாமலை அவருடைய பகுதியான கரூர் நாமக்கலில் இருக்கிறார் ஆனால் எங்கள் அம்மாவை தலைவரை அவதூறாக பேசுகிறார்,
பெரியாரைப் பற்றி பேசுகிறார் அப்படி அவதூறு பேசிய அண்ணாமலை அவர்களுடன் நம்ம பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் ஓபிஎஸ் இருக்கின்றார் ஓபிஎஸ் - அவரை உலகத்துக்கு தெரிகின்றது என்றால் நாட்டுக்கு தெரிகின்றது என்றால் ஊடகங்களை மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் என்று செய்தி வரக்கூடிய வழியில் அதற்கு காரணம் யார் அந்த தலைமையை கொச்சைப்படுத்திய அண்ணாமலையுடன் நின்று கைகூப்பி வாக்கு சேகரித்து வருகிறார் (சே என்று ஏளனமாக பேசி முடித்தார் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்