ஊழல் பற்றி பேச அண்ணாமலைக்கோ மோடிக்கு அருகதை இல்லை:சிங்கை ராமசந்திரன்
இறந்து போன ஒருவரை பேசியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என சிங்கை ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் செய்தியாளர்களை பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர் பாஜகவின் கரூரை சேர்ந்த அண்ணாமலை மறைந்த என் தந்தை பற்றி பேசியது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கோட்டாவில் சீட் வாங்கியதாக கூறியுள்ளார்.
தந்தையின் மறைவின் போது தனக்கு 15 வயது எனவும் காசு இல்லாமல் கடன் வாங்கி தான் காரியம் செய்ததாக கூறியவர் அப்பா மறைவிற்கு பிறகு என் அம்மா தான் என்னை கஷ்டபட்டு வளர்த்தார் எனவும் இறந்த ஒருவரை பற்றி அண்ணாமலை பொய்யான தகவல் பரப்பி வருகிறார் என தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அவரது அப்பா இருந்துள்ளார் ஆனால் எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை என்று வருத்துடன் பேசினார். அண்ணாமலை கீழ் தரமாக இறந்து போன ஒருவர் குறித்து பேசி உள்ளதாகவும் அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றார்.
அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி சுகாதரத்தில் இந்தியாளவில் 42-வது இடத்தில் இருந்தது எனவும் திமுக ஆட்சி வந்த பிறகு 180 இடத்திற்கு சென்றுவிட்டதாகவும் போதை பொருள் என்பது தவறான செயல்.போதை பொருள்,கஞ்சா சாக்லெட்,மாத்திரை ஆகியவை திமுக ஆட்சியில் பெருகி உள்ளது என குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் கோவை நல்ல வளர்ச்சி அடைந்ததாகவும் திமுக ஆட்சியில் வளர்ச்சி அடையாமல் கோவை பின் தங்கியுள்ளது தெதிவித்தார்.ஊழல் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கும்,பாஜகவிற்கும்,மோடிக்கு அருகதை கிடையாது என்ற அவர் தேர்தல் பத்திரம் மூலம் 6000 கோடி வாங்கி உள்ளார்கள் எனவும்ப்திமுகவினர் அதே நபரிடம் காசு வாங்கி உள்ளதாக தெரிவித்தார்.33 மாதம் ஆட்சி காலத்தில் திமுக ஒன்றும் செய்யவில்லை எனவும் பாஜக, திமுகவும் ஊழலை பற்றி பேச கூடாது என்றார்.
இந்தி தெரியாது போடா என்று சொன்ன உதயநிதி தற்போது இந்தி படத்தை விநோயகம் செய்து வருகிறார் எனவும் கேலோ இந்தியா போட்டியில் உதயநிதி மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து நிகழ்ச்சியை நடத்தியதாகவும் மோடி அரசு கோவைக்கு என்ன சாதனை செய்தார்? என கேள்வி எழுப்பினார்.சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் அஞ்சலி செய்து அரசியல் செய்கிறார்கள் எனவும் 30 ஆண்டுகளுக்கு முன் நடந்தவ்அந்த சம்பவத்தை மக்கள் மறக்க நினைப்பதாகவும் ஆனால் பாஜகவினர் அதனை நினைவுபடுத்துகிறார்கள் என தெரிவித்தார். கோவை மக்கள் யாரும் போய் உதயநிதி பார்க்க முடியுமா?இல்லை அண்ணாமலையை தான் பார்க்க முடியுமா?? என்று கேள்வி எழுப்பியவர் நான் கோவையில்,
உள்ளவன் என்னை யார் வேண்டுமேனாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்க முடியும் எனவும் அதிமுகவிற்கும்,திமுகவிற்கு தான் போட்டி அண்ணாமலை இதில் இடம் இல்லை எனவும் கோவையில் பாஜக 60% வாக்கு பெறும் என அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு அவ்வாறு நடந்தால் நான் அரசியல் விட்டு விலகுகிறேன் என்று சவால் விடுத்தார். கோ
வை வளர்ச்சி நிறைய விஷயங்கள் உள்ளது எனவும் அதை விட்டுவிட்டு பொய் பேசி வருகிறார் அண்ணாமலையை என்றவர் கோவையில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.வெற்றி பெற்ற பிறகு வருடம் வருடம் ஆய்வு கூட்டம் நடத்துவேன் என்றும் ஆய்வு கூட்டத்தில் மக்களை பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று உறுதியளித்தார்.அண்ணாமலை 20,000 புத்தங்கள் படித்தேன் என்று சொல்லுவது முற்றிலும் பொய் என்றும் அவர் பிறந்த முதல் இப்ப வரை படித்து இருந்தலே வெறும் 14,000 புத்தங்கள் தான் படித்து இருக்க முடியும் என்று கூறினார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என அண்ணமலை கூறியது தொடர்பான கேள்விக்கு அப்படி நடந்தால் அரசியல் விட்டு விலகி போவதாக தெரிவித்தார்.வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது எனவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.