கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் -  விஜயதரணி நம்பிக்கை

நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த விஜயதரணி கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.;

Update: 2024-04-19 08:17 GMT

 வாக்களித்த விஜயதரணி

குமரி மாவட்டம் விளவங்கோடு  சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி இன்று நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் பகுதி அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகள் தனது வாக்கினை பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் கூறுகையில்:-     "விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.அங்குள்ள  மக்கள் நல்ல வாய்ப்புகளை தருவார்கள். அந்த வகையில் எங்களுடைய வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக தென்படுகின்றன.     கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார். மக்களுடைய வரவேற்பு அமோகமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் அவர் வரவேண்டும்  என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement

எனவே நிச்சயமாக மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி என்பது மாற்றுக் கருத்து இல்லாத உண்மை.  தமிழகத்தை பொறுத்த மட்டில் பாஜகவிற்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி அதிகப்படியான இடங்களையும் கைப்பற்றும். எனவே தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை காணப் போகிறது என்பதை என்னால் நிச்சயம் கூற முடியும்.     என்னுடைய இலக்கு கட்சித் தலைமை தரக்கூடிய பணியை செம்மையாக செய்வது தான். மேலும் கட்சியும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் இந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News