அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா

குமாரபாளையம் அருகே அரசு மேல்நிலைப்  பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-02-13 10:20 GMT

ஆண்டுவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள  பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தலையாசிரியர் முருகன்  தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகள், கலைப்  போட்டிகள், பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், தமிழ்க்கூடல்  போட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பி.டி.ஏ. நிர்வாகிகள்  நாச்சிமுத்து, சவுந்திரம், துரைசாமி பரிசுகள் வழங்கினர். ஆசிரியைகள் காந்தரூபி, ராணி மரகதவள்ளி உள்பட பெற்றோர்கள், பொதுமக்கள் பெருமளவில்  பங்கேற்றனர்.
Tags:    

Similar News