ஆத்தூர் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆத்தூர் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-01 09:48 GMT
பரிசு வழங்கல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆத்தூர் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவி ரெஜினா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிங்கார வேல் , பள்ளிமேலாண்மைக்குழு தலைவி வனரோஜா, முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியை பூங்கொடி வரவேற்றார். ஆசிரியை மாலா ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகி இராஜ ரெத்தினம், செயலர் தினேஷ்பாபு ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரியை சுகுணா, ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்