பர்கிட்மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம், பர்கிட்மாநகரம் பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-24 06:15 GMT
ஆண்டுவிழா
திருநெல்வேலி மாவட்டம், பர்கிட்மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று (பிப்.23) இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவில் பெற்றோர்கள், அப்பகுதி சுற்று வட்டார மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.