கொத்தூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா

ஒசூர் அருகே கொத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-20 07:48 GMT
ஒசூர் அருகே உள்ள கொத்தூரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்ட்டாடப்பட்டது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதிக நாட்கள் வருகை புரிந்த மாணவர்கள், ஓவியப் போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஆகிய அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முனிராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீவெங்கட்டகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வெங்கடேசன், ஆசிரிய பயிற்றுநர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News