விடைத்தாள் திருத்தும் பணி: கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-02-27 12:37 GMT

மனு வழங்கல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச்செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு விதிமுறை மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் பணி அமர்த்த வேண்டும். ஓய்வு பெறுபவர்கள், பணி நீட்டிப்பு, விருப்ப ஓய்வில் உள்ள ஆசிரியர்கள், கர்ப்பிணிகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

Similar News