குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, அனைத்துறை அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, அனைத்துறை அலுவலர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அவர்கள் தலைமையில் அனைத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியானது இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெய்சங்கர், தொழிலாளர் நல உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.