ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
By : King 24x7 Website
Update: 2023-12-04 08:19 GMT
நாடு முழுவதும் நவம்பர் 22ம் தேதி தேசிய மாணவர் படை தினம் கடைபிடிக்கப்பட்டு அதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ள தனியார் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை தினத்தை கடைபிடிக்கும் விதமாக லஞ்சம் ஊழலை ஒழிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மேற்கு காவல் ஆய்வாளர் மாரியப்பன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணியில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொடுக்காதே கொடுக்காதே லஞ்சம் கொடுக்காதே, ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம், வாங்காதே, வாங்காதே லஞ்சம் வாங்காதே, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர், லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம், ஊழலுக்கு ஒரே தீர்வு அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மையே,போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள தனியார் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து, மாரியம்மன் கோவில், தேசபந்து மைதானம், மீனாம்பிகை பங்களா, புல்லலக்கோட்டை ரோடு, ஆர்.சி.தேவாலயம் வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிவடைந்தது.