சிவகாசி அருகே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை

சிவகாசி அருகே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2024-03-12 15:18 GMT

சிவகாசி அருகே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.


சிவகாசி அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர்,வீட்டில் ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மேட்டமலை பஞ்சாயத்தில் பார்த்தசாரதி என்பவர் தலைவராக செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ், இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்டமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுக் கடைக்கு வரைபட அனுமதி பெற அப்போதைய மேட்டமலை ஊராட்சி செயலர் கதிரேசன் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது,பட்டாசு கடை வரைபட அனுமதி பெற திருமலைராஜிடம் கதிரேசன் ரூ 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.இதனையடுத்து திருமலைராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவியுடன் கதிரேசனிடம் ராசயன தடவிய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்த போது கைது செய்யப்பட்டார்.இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஊராட்சி அலுவலகம் மற்றும் தலைவர், செயலாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து ஊராட்சி செயலர் இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டு,மாவட்ட ஆட்சித் தலைவர் மேட்டுமலை ஊராட்சி தலைவரின் காசோலை உரிமையை ரத்து செய்தார்.இந்த நிலையில் ஊராட்சி செயலர் கதிரேசன் லஞ்ச ஒழிப்புத்துறை மீது வழக்கு தொடர்ந்ததாக தெரிய வருகிறது.இதனையடுத்து வழக்கினை விரைந்து முடிக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேட்டமலை பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தலைவர் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News