ஆர்.கே.எஸ். கல்வி குழுமத்தில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு

Update: 2023-11-01 08:35 GMT

உறுதிமொழி ஏற்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்வி குழுமத்தில்'ஊழல் தடுப்பு' விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்.கே.எஸ்.கலை-அறிவியல் கல்லுாரிதுணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவி பிரவீனா வரவேற்றார்.'வளர்ந்த தேசத்திற்கு ஊழலற்ற இந்தியா' என்ற தலைப்பின் கீழ் கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
Tags:    

Similar News