போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
Update: 2024-03-14 04:40 GMT
விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரணிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சிராஜ்தீன் வரவேற்றார். எலவனாசூர்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் நந்தகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், துணை தலைவர் ஷம்ஷாத், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதா மனோகரன், பர்வீன்பானு சர்தார், மாவட்ட கவுன்சிலர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் விருகாவூரில் நடந்த ஊர்வலத்தை ஊராட்சி தலைவர் அருள்சந்திரலேகா துவக்கி வைத்தார். வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, ஊராட்சி துணை தலைவர் பன்னீர்செல்வம் அலமேலு, கல்லுாரி துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.