போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-06-27 12:18 GMT

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணிதிட்டம் மற்றும் தடயவியல் துறை ஆகியவை சேலம் டவுன் போலீஸ், மாநகராட்சி, மாவட்ட கலால் துறை, உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின. ஊர்வலத்திற்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருத்தினராக சேலம் மாநகர வடக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பிருந்தா, சேலம் மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள், சுகாதார துறை இணை இயக்குனர் ராதிகா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் ஆகியோர் பங்கேற்று ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட புகையிலை ஆலோசகர் அஷ்வந்த் வெற்றி வேல், மாவட்ட கலால் துறை துணை ஆணையர் மாறன், தொழிற்நுட்ப தனிப்பட்ட உதவியாளர் பிளவேந்திரன் மற்றும் சமூக சேவகர் முருகன், ஹரிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊா்வலமானது புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி 5 ரோடு வழியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலைய பகுதியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் துறையை ேசர்ந்த மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், தடயவியல் துறை பொறுப்பாளர் மோகன், உதவி பேராசிரியர்கள் லின்சி, அமிதா, ராஜஸ்ரீ, ஜெயபாலன், மெய்பிரபு மற்றும் கோகுலபிரியா ஆகியோர் செய்திருத்தனர்.

Tags:    

Similar News