சேலத்தில் அப்போலா சர்க்கஸ்

சேலத்தில் அப்போலா சர்க்கஸ் தொடங்கியது. கலைஞர்களின் சாகசகங்களை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.

Update: 2024-02-22 01:21 GMT


சேலத்தில் அப்போலா சர்க்கஸ் தொடங்கியது. கலைஞர்களின் சாகசகங்களை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.


சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அப்போலா சர்க்கஸ் பிரமாண்ட கூடாரத்துடன் அமைக்கப்பட்டு தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள், சாகசம் மற்றும் நகைச்சுவை கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

குறிப்பாக அந்தரத்தில் அழகு பெண் கலைஞர்களின் பார் விளையாட்டு, மரண கூண்டில் 3 பேர் சுற்றி வரும் காட்சிகள், கத்தி மேல் படுத்து வித்தை காட்டும் காட்சிகள் அனைத்தும் நம்மை இருக்கையின் நுனிக்கே வரவழைத்து விடுகின்றன. மெய்சிலிர்க்க செய்யும் காட்சிகள் இதுதவிர நாவல் பல்டி, சீன கலைஞர்களிடம் பயிற்சி பெற்ற மணிப்புரி கலைஞர்கள் பங்கு பெறும் சேர் அக்ரோபேட், ஸ்டிக் ஜக்லிங், ரோப் பேலன்ஸ் ஸ்பிரிங் நெட் சாகசங்கள் உள்ளிட்ட ஏராளமான காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க செய்கின்றன.


அரங்கத்துக்குள் நுழைந்ததில் இருந்து 2 மணி நேரமும் நமது கண்முன்னே கலைஞர்கள் சாகச விருந்து படைகின்றனர். கோமாளி கலைஞர்களின் நகைச்சுவை காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். இந்த காட்சிகள் தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை சர்க்கஸ் உரிமையாளர் சுனில் ஜார்ஜ், ஈரோடு பாபு ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News