சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 20- தேதி கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-31 05:31 GMT
கலெக்டர் கலைச்செல்வி
சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புவோர், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும். விருது பெற விண்ணப்பிக்க விரும்புவோர், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், ஜூன் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில், கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.