டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலையில் டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 14:06 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் சார்பில் 2 டேட்டா ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு கணினி பட்டதாரி அல்லது கணினி டிப்ளமோ முடித்தவர்கள் வருகிற ஜூன் 22.6.2024 மாலை 4 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்ட துணை சுகாதார பணிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ .பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News