ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கிலம், இயற்பியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக பணி நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-06-30 06:29 GMT

ஆட்சியர்  மெர்சி ரம்யா

 மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் முள்ளங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஆங்கிலம் மற்றும் இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவோ பதவி உயர்வு மூலமாகவோ நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக இப்பணியிடம் அனுமதிக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர், இல்லம்தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு வரும் ஜூலை 5 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News