புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் நியமனம்
சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் படி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Update: 2023-12-30 12:07 GMT
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22.11.2023 அன்று சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு மருத்துவர் இல்லாதிருந்த நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒரு மெடிக்கல் ஆன்காலஜி (புற்றுநோய் சிகிச்சை மருத்துவம்) மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனால் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளித்திட இயலும். மேலும் புற்றுநோயினை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய காலத்தில், உரிய சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.