தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய பாராளுமன்ற தேர்தல், 2024-க்கான தேர்தல் நடவடிக்கைகள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 16.03.2024-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தலைமையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை மேற்பார்வையிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.
விளாத்திகுளம், ஓட்டபிடாரம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை அஜய் ரூமல் கர்டே, செலவினப் பார்வையாளர் மேற்பார்வை செய்வார். அதேபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை ஸ்ரீஜூ, செலவினப் பார்வையாளர் மேற்பார்வை செய்வார்.
தேர்தல் செலவின பார்வையாளர் ஸ்ரீஜூவை 8925921301 என்ற தொலைபேசி எண்ணிலும், தேர்தல் செலவினப் பார்வையாளர் அஜய் ரூமல் கர்டேவை 8925921302 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்சொன்ன தேர்தல் பார்வையாளர்கள் வாக்குபதிவு முடியும் வரை இத்தொகுதியில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 2024 மக்களவை பொது தேர்தல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர (24x7) தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
தேர்தல் தொடர்பான புகார்களை இதற்கான ஒதுக்கப்பட்டுள்ள 1800 – 599- 1960 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை ‘1950” என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சி விஜில் (C Vigil) செயலி மூலமும், வாட்ஸ்அப் செயலி எண் 94864 54714 மூலமும் புகார்கள் அளிக்கலாம் என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.