எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நியமனம்
திருநெல்வேலியில் அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளராக சின்னத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
Update: 2024-03-08 12:02 GMT
அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளராக நெல்லையை சேர்ந்த சின்னத்துரை என்பவர் தலைமை கழகத்தால் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 8) காலை அவர் திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேஷ்ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.